search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிசிசிஐ தேர்வுக்கு தலைவர் எம்எஸ்கே பிரசாத்"

    உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்துக்கு கட்டாயம் இடமுண்டு என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் உறுதியாக தெரிவித்துள்ளார். #RishabhPant
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிசப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் குவித்து, தொடரில் புஜாராவிற்கு அடுத்தபடி அதிக ரன்கள் குவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திது.

    இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:-

    சாம்பியன் கிரிக்கெட் வீரராக உருவாகி வரும் ரிசப் பந்த் ஆஸ்திரேலியாவில் மூன்று 20 ஓவர் ஆட்டம், 4 டெஸ்டில் தொடர்ந்து ஆடினார். தற்போது அவருக்கு 2 வாரங்கள் ஒய்வு தேவை. இதனால்தான் ஒருநாள் தொடரில் அவரை சேர்க்கவில்லை. எதிர்கால நட்சத்திர வீரராக உள்ள ரிசப் பந்த் தொடர்பாக தேர்வுக்குழு கவனத்துடன் செயல்படுகிறது. 2019 உலகக்கோப்பை அணியின் செயல் திட்டத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை ரிசப் பந்த் கடைபிடித்து வருகிறார்.  இங்கிலாந்தில் அவர் கேட்ச்களை பிடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்.

    இளம் வீரர் ஷுப்மான் கில் சர்வதேச போட்டிக்கு தயாரானது மகிழ்ச்சி அளிக்கிறது. விகாரி, அகர்வால், பிரித்வி ஷா, கலீல் அகமது ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அப்படி செய்யாவிட்டால் ஆஸ்திரேலியா டெஸ்டில் அவர் ஆடி இருக்க முடியாது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் முகமது ‌ஷமிக்கு அவரது உடல் தகுதி சாதகமான அம்சமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ×